Home » Editorial » புதிய அரசை வரவேற்போம்

 
புதிய அரசை வரவேற்போம்


admin
Author:

  • நாட்டு மக்கள் தங்களை ஆளும் தலைவர்களைத் தேர்ந்தெடுத்து விட்டார்கள். அடுத்த ஐந்தாண்டுகட்கு அவர்கள் நமக்கு ஆட்சித்தலைவர்கள் இந்த நாட்டு மக்களின் நன்மை கருதி சில வேண்டுகோள்களை அவர்கள் முன்பு வைப்பது கடமை என்று கருதுகிறோம்.
  • ஐந்தாண்டுகளும் அவர்கள் ஒற்றுமையாகவும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் செயல்பட வேண்டும்.
  • ஐந்தாண்டுகளுக்கும் கிடைத்துள்ள ஆளும் வாய்ப்பை பயன்படுத்தி நாட்டு மக்களுக்கு எந்த அளவு நன்மை செய்ய முடியுமோ அந்த அளவு நன்மை செய்ய விரைந்து செயல்படவேண்டும்.
  • மாலை, மரியாதை, மலர்க்கிரீடங்கள் என்று பொதுமக்கள் வரிப்பணத்தை வீண்டிக்காமல் எளிமையாகவும் சிக்கனமாகவும் ஆட்சி நடத்த வேண்டும்.
  • உணவு, உடை, உறையுள் இந்த அடிப்படையான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அவர்கள் தங்கள் திட்டங்களுக்குமுன்னுரிமை கொடுக்க வேண்டும்.
  • கல்வி, மருத்துவம், தொழில் வளர்ச்சி இவற்றி தனிக்கவனம் செலத்துமாறு அரசின் திட்டங்கள் இருக்க வேண்டும்.
  • குடும்பக்கட்டுப்பாட்டில் தனிக் கவனம் செலுத்தி மக்கள் தொகையைக் குறைக்க வழி செய்யாத வரை நமதுதிட்ட்கள் எல்லாம் வீணாகிவிடும், என்பதை கருத்திக் கொண்டு செயல்பட வேண்டும்.
  • வீட்டுக்கு ஒருவருக்கு வேலை என்ற நிலையில் அரசு உழைக்கும் வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும்.
  • “பொது மக்களுக்கு நன்மை செய்வதே நமது இலட்சியம்” என்று “புதிய அரசு” அந்த இலட்சியத்தை நோக்கிச் செயல்பட வேண்டும் என்று வேண்டுகோஓள் விடுக்கிறோம்.
  • தேர்ந்தெடுக்கபட்டவர்கள் அவரவர் தொகுதியில் 5 ஆண்டுகளில் 5 முறையாவது தங்கள் வாக்காளர்களை சந்திக்கும்ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
  • கட்சியின் பெயரால் யாரை நிறுத்தினாலும் மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நிலையிலிருந்து மாறுபட்டு ஒரு கட்சியிலேயே கூட நல்லவர்களை நிறுத்தினால்தான் வெற்றி பெற முடியும் என்ற நிலையை வாக்காளர்கள் உருவாக்க வேண்டும்.
    • -ஆசிரியர் குழு


      Share
       

      No comments

      Be the first one to leave a comment.

      Post a Comment


       

 


December 1989

நம்பிக்கை…
கவிதைகள்
சிந்தனைத்துளி
வெள்ளைப் புறாக்களே!
இனிய நண்பர்களே! வணக்கம்.
புதிய அரசை வரவேற்போம்
நிரந்தர வெற்றிக்கு….
நமக்கு வந்த கடிதங்கள்
ஒரு சாதனையாளரை சந்தித்தபோது…
தோழா உனக்கென்ன..!