Home » Articles » நிரந்தர வெற்றிக்கு….

 
நிரந்தர வெற்றிக்கு….


கந்தசாமி இல.செ
Author:

வாழ்க்கை ஓரிரு நாட்களில் ஓரிரு நிகழ்ச்சிகளோடு முடிந்து விடுவதில்லை. வாழ்க்கை என்பது நெடியது, நீண்டது. நீண்டு கொண்டே செல்வது. ஆனால் நம் வாழ்நாள் குறுகியது. இந்த குறுகிய வாழ்நாளில் நாம் சாதிக்க வேண்டிய சாதனைகள் ஏராளமக உள்ளன. அதை விடுத்து அற்ப விசயங்களுக்கு ஆசைப்பட்டு வாழ்க்கையை ஒரே நாளில் தொலைத்துவிடக்கூடாது. அப்படித் தொலைத்துவிட்டு அதைச்
சரிசெய்வதற்கே வாழ்நாள் முழுவதும் அல்ல்ல்படுகின்ற சிலரை நாம் வாழ்க்கையில் காண்கிறோம். அவர்களுடைய வாழ்க்கையே நமக்கு எச்சரிக்கையாகும்.

அவசரமாக முன்னேற வேண்டுமென்ற ஆசை

சிலர் அவசர அவசரமாக முன்னேறி விட வேண்டும் என்ற வேகத்தில் தவறு செய்துவிடுகிறார்கள். அதனால் சிலர் தண்டனை அடைகிறார்கள். சிலர் தோல்வியே அடைந்து விடுகிறார்கள்.

ஒரு மளிகைக் கடைக்காரரை எடுத்துக்கொள்வோம். மக்களுக்கு கிடைக்காத தட்டுப்பாடான சர்க்கரை போன்ற பொருள் அவர் கடையில் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இயல்பான விலை கிலோ 5 ரூபாய். ஆனால் தட்டுப்பாடு என்பதால் பல இடங்களில் பத்துரூபாய்க்கு விற்கிறது. அதுவும் எல்லா இடங்களிலும் தீர்ந்துவிட்டது. இவர் ஒருவர் கடையில் தான் இருக்கிறது. சர்க்கரை இருப்பது தெரிந்து இவரது வாடிக்கையாளர்களே வந்து கேட்கிறார்கள். இவர் என்ன செய்யவேண்டும்? அதே பத்து ரூபாய்க்குக் கொடுத்தால் யாரும் வருத்தப்பட மாட்டார்கள். அல்லது ஓரிரு ரூபாய் கூடுதலாக வைத்து விற்றால்கூட வருத்தப்பட மாட்டார்கள். ஆனால் இவர் யாரை பற்றியும் கவலைப்படாமல் – மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளாமல் எப்படி இருந்தாலும் வாங்கித்தானே ஆக வேண்டும் என்ற கருத்தில் கிலோ 25 அல்லது 30 ரூபாய் என்று சொல்கிறார் என்றால் மக்கள் என்ன சொல்வார்கள்? அவசரத் தேவைக்கு வாங்கவே செய்வார்கள். ஆனால் இயல்பான காலத்தில் அவர் கடையை நாடாமாட்டார்கள். அநியாயமானவர் என்று முடிவு கட்டுவார்கள். மெல்ல மெல்ல அந்தக் கடைக்காரரை புறக்கணித்து விடுவார்கள். அந்த குறுகிய காலத்தில் அவர் அடைந்த இலாபத்தை விட நீண்ட காலத்தில் அவர் அடையப்போகும் இழப்பு பல மடங்கு பெரியதாக இருக்கும். இத்தகையவர்கள்தான் தற்காலிகமாக வெற்றியை பெரியதாக எண்ணி நிரந்தர வெற்றியை இழந்துவிடுபவர்கள் ஆவார்கள்.

உண்மையை மறைத்துப் பேசுவது

சிலர் உண்மையை மறைத்து அப்போதைக்கு ஏதாவது ஒன்று சொல்லித் தப்பித்துக் கொள்வார்கள். அந்த நேரத்தில் அவர்கள் தற்காலிகமாக வெற்றி பெறுவது உண்மை தான். இப்படியே ஓரிரு சமயங்களில் வெற்றிப் பெற்று விடவும்கூடும். ஆனால் இவர் சொன்னதல்லாம் பொய்யானவை என்ற உண்மை தெரிந்த பிறகு இவர்கள் தொடர்ந்து தோல்வியையும் துன்பத்தையும் அனுபவிப்பார்கள் பின்னர் திருந்தி, உண்மையாகவே நடந்து கொண்டாலும் அவரை யாரும் நம்பமாட்டார்கள். உண்மைக்கு மாறானவர், பொய் சொல்பவர் என்றே உலகம் நினைத்து அவரைக் கைவிட்டுவிடும்.

ஆளுக்குத் தகுந்தாற்போல் நடப்பது சிலர் உண்மையைப்புறக்கணித்து விட்டு ஆளுக்கு தகுந்த மாதிரி நடந்து கொள்வார்கள். அந்தக் குறிப்பிட்ட செல்வாக்கில் உள்ளவரை இப்படி நடப்பவர்கள் காலம் நன்றாகவே ஓடும். தனக்கு வேண்டாதவர்களை இந்த செல்வாக்கு உள்ள நேரத்தில் இவர் பழி தீர்த்துக் கொள்ளவும் கூடும். ஆனால் மேலே உள்ள ஆள் – அதிகாரி போன பிறகு இந்த மனிதர் கண்ட இடத்தில் கல்லடி பட வேண்டிய அவல நிலை ஏற்பட்ட விடும். ஆளுக்குத்தகுந்த மாதிரி பணியாகவோ – அல்லது வேறு எதிர்பார்க்கின்றவகையிலே நடந்து கொள்வதில்லை தவறியில்லை. ஆனால் எல்லாவற்றையும் விட உண்மை பெரிதல்லவா? அதை விட்டு விட்டு என்ன செய்துவிட முடியும்? அவலம் தான் மிஞ்சும்.

மதிக்கத்தகுந்த மனிதர்கள்

ஒருசில கட்சிகள் ஆட்யில் இருந்தாலும் ஆட்சியை இழந்தும் இருந்தாலும் அந்த கட்சியின் தலைவரை மதிக்க முடியாத நிலையில் இருக்கிறோம். ஆனால் அந்தக் கட்சியில் உள்ள சிலர் மக்களால் மதிக்கத்தகுந்தவர்களாக இருக்கிறார்களே காரணம் என்ன? அத்தகையவர்கள் மக்களுக்கு எது நன்மை என்பதையே மனதுள் கொண்டு செயல்படுவதுதான் என்பதை நான் அறிவோம்.

உங்கள் தேவையை நோக்கித் திட்டமிடுங்கள்

ஒரு நாடோ, ஒரு நிறுவனமோ, ஒரு குடும்பமோ தற்காலிக வெற்றிக்கு மட்டுமே உழைத்தால், நம் இந்திய நாடு போல 40 ஆண்டுகளுக்குப் பிறகும் 50 விழுக்காடு மக்கள் வறுமைக்கோட்டிற்கும் கீழ் வாழ வேண்டியதுதான். நம் நாட்டின் தேவையை உணர்ந்து அரசியல் தலைவர்கள் உணவு, கல்வி, தொழில்கள், சுகாதாரம் என்று தொலை நோக்குடன் செயல்பட்டிருந்தால் ஜப்பானைப்போல் நாமும் முன்னேறி இருக்கலாம். நமது திட்டங்கள் எல்லாம் தேர்தலை நோக்கியத் திட்டமாக, வேட்டி- சேலை திட்டமாக இருந்ததால், இருப்பதால் இன்னும் அவற்றை மக்களுக்கு வழங்க வேண்டிய நிலை, மக்களும் கைநீட்டி வாங்க வேண்டிய நிலையிலேயே இருக்கிறார்கள்.

ஆதலால் நிரந்தர வெற்றிக்கு வழி எப்போது உண்மையாக நடந்து கொள்ளல், எப்போதும் நேர்மையாக நடந்து கொள்ளல், தொடக்கத்தில் இம்முறை சற்றே துன்பம் தருவதாக இருந்தாலும் காலப்போக்கில் இதுவே சிறந்த வழியாக அமையும். உண்மை மிகப் பெரிய வலிமையை நமக்கு நல்கும். இளைஞர்கள் நிரந்தர வெற்றிக்கு வழி வகுத்துக்கொள்வார்களாக.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 1989

நம்பிக்கை…
கவிதைகள்
சிந்தனைத்துளி
வெள்ளைப் புறாக்களே!
இனிய நண்பர்களே! வணக்கம்.
புதிய அரசை வரவேற்போம்
நிரந்தர வெற்றிக்கு….
நமக்கு வந்த கடிதங்கள்
ஒரு சாதனையாளரை சந்தித்தபோது…
தோழா உனக்கென்ன..!