Home » Articles » நமக்கு வந்த கடிதங்கள்

 
நமக்கு வந்த கடிதங்கள்


admin
Author:

“பதினெட்டே முன் வருக” கட்டுரையைப் பற்றி,

டாக்டர் எல்.எஸ்.கே. அவர்களின் சிந்தனைகள் இந்தியாவில் உள்ள அனைவர்க்கும் பொருத்தமே. அதிலும் தமிழ் மக்களுக்கு மிகவும் பொருந்தும்.

அகநானூறு, புறநானூறு கண்ட தமிழர்கள் இன்று திரைபடக் காட்சிகளை உண்மை என்று நம்புவதும், திரைப்பட நடிகர்களை வழிகாட்டியாக்க் கொண்டு வாழ்வதும் வருந்த தக்கது,, என்று தன்னம்பிக்கை இதழைப் பார்த்த ஈழத்தமிழர் ஒருவர் குறிப்பிட்டதை எழுதியுள்ளார்.

-என்.ஆர். செயச்சந்திரன்
தரும்புரி – 635112

தங்களது கட்டுரையைப் படித்தேன். இன்றைய இந்தியாவின் சமுதாய, அரசியல் , பொருளாதார, கலாச்சார பண்பாட்டு நிலைமைகளையும் அவைகளுக்குப் பரிகாரம் காணும் வகையில் இன்றைய இளைய தலைமுறைக்கு தாங்கள் விடுத்துள்ள யோசனைகளையும் கவனித்தேன்.

இன்றைய சூழ்நிலைகளுக்கு அவை மிகவும் பயனளிக்கக் கூடிய கருத்துக்களாகவும் அமைந்துள்ளன. எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

கலைமணி எஸ். மணி, கோவை-1

தங்களைப் போன்ற இலக்கியவாதிகள் அறிவு ஜீவிகள் எழுதிகின்ற பேசுகின்ற சொற்கள், கருத்துக்கள் இச்சமுதாயத்திற்கு அதிகம் அவசியம் என்கிற எண்ணம் கொண்டவன் நான்.

கோவையைப் பொருத்தவரை அறிவு ஜீவிகள், பேச்சாளர்கள் இலக்கியவாதிகள் கூட சாதிய உணர்வுகளோடு இன்று அமைப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிற சூழ்நிலையில் அவர்களுக்கும் உங்கள் வார்த்தைகள் அவசியம். உழைக்கும் மக்கள் வாழும் மண்ணில் வீசும் விசங்களோடு ஊடுருவுகிறது.

இளைஞர்களுக்கு சிந்திக்க சரியான நேரத்தில் தேச தேகத்தை அலசியது சரியானதே. ஆனால் இளைஞர்களின் எழுச்சியை நியாயப்படுத்தி அசாமை சுட்டி காட்டினீர்கள். அதே போல் சீனத்தை சுட்டியிருக்கிறார்கள்.

சீன மண்ணில் சரியான திசை வழியில் மனித மாண்போடு வயிறும் காப்பாற்றாப்பப்பட்டாக வேண்டும் என்ற சூழலில் அரசு எடுத்த நடவடிக்கை தான் சரியானதாக இருக்க முடியும். இளைஞர்கள் என்பதாலேயே எடுக்கின்ற முடிவுகள் சரியானது என்பதைப் போன்ற தங்கள் கருத்து முரணானது என்றே கருதுகிறேன்.

என் பாலமூர்த்தி, கோவை – 20


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 1989

நம்பிக்கை…
கவிதைகள்
சிந்தனைத்துளி
வெள்ளைப் புறாக்களே!
இனிய நண்பர்களே! வணக்கம்.
புதிய அரசை வரவேற்போம்
நிரந்தர வெற்றிக்கு….
நமக்கு வந்த கடிதங்கள்
ஒரு சாதனையாளரை சந்தித்தபோது…
தோழா உனக்கென்ன..!