Home » Articles » தோழா உனக்கென்ன..!

 
தோழா உனக்கென்ன..!


சீதாபாரதி க
Author:

தோழா!
வெந்து தணியுமுன்
ஒரு முறை
வெற்றிக் கொடி
நாட்டு!

நட்சத்திரம்
நாளை எண்ணலாம்
நம்பிக்கையை
இன்றே விதை!

மலையுச்சி
தொடு முன்
இடறி விழும்
மடுவை
அலட்சியம் செய்
உன் லட்சியம் வாழ!

விலகி நிற்காதே
எதிர்த்து நில்
தயங்கி நிற்பின்
தரணியுனை
தவிக்க விடும்.
துணிந்து நிற்பின்
துவண்டு போகும்!

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 1989

நம்பிக்கை…
கவிதைகள்
சிந்தனைத்துளி
வெள்ளைப் புறாக்களே!
இனிய நண்பர்களே! வணக்கம்.
புதிய அரசை வரவேற்போம்
நிரந்தர வெற்றிக்கு….
நமக்கு வந்த கடிதங்கள்
ஒரு சாதனையாளரை சந்தித்தபோது…
தோழா உனக்கென்ன..!