Home » Editorial » இளைய நெஞ்சங்களுக்கு வணக்கம்

 
இளைய நெஞ்சங்களுக்கு வணக்கம்


ஆசிரியர் குழு
Author:

இளைய நெஞ்சங்களுக்கு வணக்கம்

இந்திய மண்ணில், இளைய தலை முறையினருக்களுக்கிடையில் தன்னம்பிக்கையை வளர்ப்பதே இவ்விதழின் தலையாய நோக்கம். இந்தியாவில் எண்பது கோடி மக்களில் நாற்பது கோடி பேர் இளைஞர்கள். இவர்கள் நினைத்தால் இவர்கள் செயல்பட்டால் இந்திய மண்ணையே பொன்விளையும் பூமி ஆக்கிவிடலாம். இவர்களை நினைக்கச் செய்வதும் செயலாற்றச் செய்வதும், செயலாற்றுவதற்கான வாய்ப்பினை சுட்டிக்காட்டுவதும் முடிந்த அளவு உருவாக்கித் தருவதும் தன்னம்பிக்கை இதழின் செயல் திட்டமாகும்.

இளைஞர்களிடையே தன்னம்பிக்கையை வளர்ப்பது.

சமுதாயத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது.

மருத்துவம், பொறியியல், வேளாண்மை அறிவியல் நுட்பங்களைப் பயன்படுத்தி மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வழி கோலுவது.

தரமான இலக்கியப் படைப்பிற்கு ஆதரவு நல்குவது.

இளைஞர்களிடையே உலகலாவிய பார்வையை உருவாக்குவது.

முதல் கட்டமாக, தமிழகத்தில் மாவட்டத்திற்கு 50 பேர் என்ற வகையில் ஆயிரம் பேரை ஒன்று திரட்டுவது.

இளைஞர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்கும் கருத்துக்களை பரப்புவது.

தன்னம்பிக்கையால் வாழ்வில் உயர்ந்த நண்பர்களையே முன் உதாரணமாக்கிக் காட்டுவது.

இந்தப்பொதுப் பணிக்கு தன்னலம் கருதாத, பதவிகளை எதிர் பார்க்காத நண்பர்கள் மட்டும் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.

தன்னம்பிக்கை தன் பணியினை செம்மையாகச் செய்ய நண்பர்களின் கருத்தோவியங்களையும் வரவேற்கின்றோம்.

பொழுது போக்கிற்கான இதழ் அல்ல இவ்விதழ். பொழுதைப் பயனுள்ள வகையில் கழிக்க – ஒவ்வொரு எழுத்தும் பயன்பட வேண்டும் என்பதே தன்னம்பிக்கையின் விருப்பம்.

இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த அமர்ர் நேருவின் நூறாண்டு விழா நினைவாக தன்னம்பிக்கை இதழ் விரிகின்றது.

– ஆசிரியர் குழு.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 1989

சிந்தனைகள்:
யாரிடத்தும் எதையும் எதிர்ப்பார்க்காதே..!!
நீ நீயாக இரு
பெண்ணே இனியாவது…
பதினெட்டே முன் வருக!
நேருவின் நெஞ்சம் கவர்ந்த கவிதை…
இளைய நெஞ்சங்களுக்கு வணக்கம்